நிரந்தரமாக சிறுநீரகக் கற்களை ஆபரேசன் இன்றிக் கரைப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. அது மிக எளிமையான வழியும் கூட. இதற்கு "பீன்ஸ் வைத்தியம்" “என்று பெயர். பீன்ஸ் என்றால் சோயா பீன்ஸ் என்று புரிந்து கொள்ள வேண்டாம். ஆங்கிலக் காய்கறி என்று சொல்லக்கூடிய பீன்ஸ்.
சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாக கூறுபவர்கள் கீழ்கண்டவாறு நாம் சொல்வதைக் கடைபிடித்தால் ஓரே நாளில் கற்கள் கரைந்து குணமடைந்து விடுவார்கள். பின்னர் “ஸ்கேன்” செய்து பார்த்தால் கூட அங்கு கற்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
அரைக்கிலோ பீன்சை எடுத்துக் கொண்டு அதில் உள்ள விதைகளை எல்லாம் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டு நறுக்கிய பீன்சை அதில் போட்டு அடுப்பில் வைக்கவேண்டும். இளம் தீயாக எரிய விடவேண்டும். கியாஸ் அடுப்பை சிம்மில் வைத்து, அதை வேக வைக்க வேண்டும். அதாவது தீ கொஞ்சம் தான் எரிய வேண்டும். விறகு அடுப்பாக இருந்தாலும் நெருப்பு மிதமாக அதிலிருந்து வெளிப்படுமாறு வைத்துக்கொண்டு பீன்சை வேகவைக்க வேண்டும்.
சீக்கிரமாக அதுவேகாமல் இவ்வாறு இரண்டு மணிநேரம் கழித்து வெந்திருக்கக் கூடிய பீன்ஸையும், நீரையும் சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு கூழ்போல் அரைத்துக் கொண்டு, ஆறியபின் குடித்துவிடவேண்டும். இந்த பீன்ஸ் கூழைக் குடித்தவுடன் அந்தக் கணத்திலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் மூன்று லிட்டர் தண்ணீரைக் குடித்துவிடவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் என்கிற அளவில் சிறிது சிறிதாக தண்ணீர் குடித்து விடவேண்டும். இவ்வாறு 3 மணிநேரத்திற்குள்ளாக 3 லிட்டர் தண்ணீரைக் குடித்து முடிக்கவேண்டும்.
அதன் பின்னர் சிறுநீர் கழிக்கும் பொழுதெல்லாம் அதை ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொண்டு கற்கள் அதில் வந்திருக்கிறதா? எனப் பார்க்கவேண்டும். எப்படியும் அன்று இரவுக்குள் சிறுநீரக கற்கள் வெளியேவந்துவிடும். அதுவரை வேறு எந்த உணவுகளும் எடுத்துக்கொள்ள கூடாது. அதன் பிறகு மூன்று மணி நேரத்திற்குப் பின் சாதரணமாய் குடிக்கும் நீரைவிட சற்று அதிகமாகக் குடித்துக் கொண்டே இருக்கவேண்டும்.
இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் பொழுது அன்று முழுவதும் ஓய்வாக இருக்கவேண்டும். வேறு எந்த வேலையும் பார்க்கக் கூடாது. கண்களை மூடிப்படுத்துக் கொண்டு நன்கு ஓய்வாகவும், உடலும், மனதும் தளர்வாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளவேண்டும். எனவே சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு இந்த வழிமுறையைக் கையாண்டு ஆரோக்கியம் பெறலாம்.