Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த விஷ்ணு கரந்தை....!

Advertiesment
அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த விஷ்ணு கரந்தை....!
விஷ்ணு கிராந்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு டீஸ் பூன் அளவு நெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் இருமல் - இரைப்பு  குணமாகும். விஷ்ணு கிராந்தி சமூலத்தை சுண்டடைக்காய் அளவு அரைத்து சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் மலத்துடன் வெளியாகும்.
விஷ்ணு கிராந்தி செடியை காயவைத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட்டு வர இருமல், சளி, உட் சூடு, காய்ச்சல்,  முதலியவை குணமாகும். விஷ்ணு கிராந்தி சமூலம் (வேர், இலை, தண்டு, பூ அனைத்தும்) அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு தயிரில்  கொடுக்க இரத்த பேதி சீதபேதி குணமாகும். காரம் புளி நீக்க வேண்டும்.
 
கபவாதசுரம் என்ற வகையைச் சேர்ந்த டெய்கு காய்ச்சலுக்கு,  ஆரம்ப நிலையில் நிலவேம்புக் கசாயம் சிறந்தது. டெங்கு காய்ச்சலுக்கான வைரஸை அழிக்கும் தன்மை நிலவேம்புக்கு உண்டு. அதே நேரம் டெங்கு முழுமையாக தாக்கும் போது விஷ்ணுகிராந்தி வேர்-6, கீழாநெல்லி  வேர்-6, ஆடாதொடை இலை-8 ஆகிய மூலிகைனளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். 
 
சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்கு மூலம், சித்தரத்தை, தானிப்பச்சரிசி, கோஸ்டம், அதிமதுரம், அக்கரா பரங்கிப்பட்டை, கோரைக்கிழங்கு,  பற்பாடகம், சீந்தில்கொடி, நிலவேம்பு, பேய்குடல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும்  நாட்டுமருந்துக்கடைகளில் கிடைக்கின்றன. 
 
இந்தப்பொடியை ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள மூலிகைகளுடன் சேர்த்து 4 லிட்டர் தண்ணீர் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு இதை ஒரு லிட்டராகச் சுண்டும் வரை காய்ச்சி வடிகட்டி தேவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்துக்  குடிக்கலாம்.

இந்தக் கஷாயத்தை பெரியவர்களுக்கு 100 மில்லி அல்லது சிறியவர்களுக்கு 50 அல்லது 25 மில்லி குழந்தைகளுக்கு 5 மில்லி  கொடுக்கலாம். தினமும் மூன்று வேளை எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால், டெங்கு மட்டுமல்ல, விடாத காய்ச்சலும் விலகி  ஓடும் என்கிறார்கள் சித்தமருத்துவர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏலக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்...!!