Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷத்தை குணப்படுத்தும் தன்மை கொண்ட வசம்பு !!

விஷத்தை குணப்படுத்தும் தன்மை கொண்ட வசம்பு !!
குழந்தைகளுக்கான அருமருந்து வசம்பு. விஷம் குடித்தவரும் பிழைத்துக்கொள்ளும் தன்மையை கொண்டது வசம்பு. நமது முன்னோர்கள் வசம்பை வீட்டில் கட்டாயம் வைத்திருந்த நிலையில், பிறந்த பச்சிளம் குழந்தைகளின் வாயில் சிறிதளவு உரசி வைப்பார்கள்.

வசம்பை பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உபயோகம் செய்யலாம். வசம்பு எப்படிப்பட்ட விஷத்தையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது. வசம்பை தூளாக்கி இரண்டு தே.கரண்டி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் அனைத்துவகையான தொற்று நோய்களும் சரியாகும். 
 
விஷம் அருந்திய நபர்களுக்கு, உடனடியாக வசம்பை இரண்டு தேக்கரண்டியில் இருந்து மூன்று தேக்கரண்டி கொடுத்தால், உடலில் உள்ள விஷம் முழுவதுமாக  வெளியேறிவிடும். 
 
வசம்பு கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கிறது. பசியினை தூண்டி சோம்பலை சரிசெய்கிறது. இன்றளவும் காய்ந்த வசம்பை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. 
 
வசம்பிற்கு பிள்ளை வளர்ப்பான் என்ற பெயரும் உண்டு. ஏனெனில் குழந்தைகளுக்கு பசியின்மை மற்றும் நோய்தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
 
வசம்பு பாரம்பரியமாக நாம் பயன்படுத்தி வந்த மருத்துவ பொருளாகும். குழந்தைகளின் வயிற்று வலி, வாயுத்தொல்லை, நெஞ்சு சளி போன்ற பிரச்சனைகளையும்  சரி செய்கிறது.

வயிறு வீக்கம், பூச்சிகள் நெருங்காமல் இருக்க, இருமல் பிரச்சனை, மூளை வளர்ச்சி, பார்வை திறன், உடலில் நச்சு வெளியேற்றம், வயிற்று போக்கு போன்ற பல பிரச்சனைகளுக்கு வசம்பு சிறந்த மருந்தாக அமைகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவகுணங்கள் நிரம்பிய காய்களில் சிறந்த பீர்க்கங்காய்...!