Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோல் சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தும் வல்லாரை கீரை

தோல் சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தும் வல்லாரை கீரை
, சனி, 21 ஏப்ரல் 2018 (14:13 IST)
மருந்துச்செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கின்றது. பிரம்பி, சரஸ்வதி, சண்டகி, யோசனவல்லி போன்ற தமிழ்ப்பெயர்களாலும் வல்லாரை பொதுவாக அழைக்கப்படுகின்றது. 
 
வல்லாரையில் இரும்புச்சத்து, சுன்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் தாது உப்புகள் நிறைந்து காணப்படுகின்றது. இது இரத்தத்திற்க்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சரிவிகித அளவில் கொண்டுள்ளது.
 
தோல் வியாதி உள்ளவர்கள் வல்லாரை மிக சிறந்த மருந்து. இக்கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வர தோல் சம்பந்தமான வியாதி குறையும்.
 
வல்லாரை கீரையை பச்சையாக சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்படையும். மாலைக்கண் நோய் குணமாக வல்லாரை கீரையோடு பசும்பால் சேர்த்து உண்டு வர  மாலைக்கண் நோய் மறையும்.
 
வல்லாரை ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது. வல்லாரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி பெருகும். புத்தி கூர்மையாகும். நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை சாப்பிடுவது நல்லது. இக்கீரை மலச் சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.
 
வல்லாரைக் கீரையை நன்கு சுத்தம் செய்து, சாதாரணமாகக் கீரைச் சாம்பார் செய்யும் முறையில் சாம்பார் செய்து, வாரம் இரண்டு முறைகள் சாப்பிட நரம்புகள்  பலமடையும்.
 
வீக்கம், கட்டிகள் மறைய வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, தொடர்ந்து வீக்கம், கட்டி ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் குணம் ஏற்படும். வல்லாரை இலைச்சாற்றைப் பிழிந்து, சம அளவு நெய் சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வர அடிபட்ட காயம், கொப்புளங்கள் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவரத்தினங்களின் மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா...!