Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ருத்ர முத்திரையை பயன்படுத்தி வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரிசெய்யலாம்...!

Webdunia
இந்த முத்திரையை செய்ய கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். நடுவிரலும் சுண்டுவிரலும் நீட்டி இருக்க வேண்டும். நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து, கால்களைத் தரையில் பதித்தோ, விரிப்பின் மீது சப்பளங்கால் போட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்தோ, 10 முதல் 40 நிமிடங்கள் வரை  செய்யலாம்.
கிடைக்கக் கூடிய பலன்கள்:
 
சோர்வு, களைப்பு, தலைசுற்றல் உணர்வு, வயோதிகத்தில் ஏற்படும் கிறக்கம் ஆகியவற்றைச் சரிசெய்யும். உடலுக்கு ஆற்றலைத் தரும். தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். நினைவாற்றல், கவனம் அதிகரிக்கும். மாணவர்களை அவசியம் செய்யச் சொல்லலாம்.
உடலில் உள்ள ஏழு சக்கரங்களில் ஒன்றான, மணிப்பூரகச் சக்கரத்தைத் தூண்டுகிறது. இதனால், உடலில் ஏற்பட்ட சமநிலையின்மை குணமாகும். சிலர், ஒரு பக்கமாக சாய்ந்து நடப்பர், வலது பக்கம் மட்டும் நன்றாகக் கை வரும், இடது பக்கம் வராது. இதுபோன்ற  சமநிலைத் தன்மை இல்லாதவர்களுக்கு, இந்த  முத்திரை நல்ல பலனைத் தரும்.
 
மன அழுத்தத்தால் ஏற்படும் இறுக்கம், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் மார்பக வலி ஆகியவற்றை இந்த முத்திரை குறைக்கும். ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், கட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்யும். காலில் உள்ள ரத்த நாளங்கள் சுருண்டுகொள்ளும் வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கான வாய்ப்பைக்  குறைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments