Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடல் ஆரோக்கியத்தை காக்கும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் !!

Advertiesment
உடல் ஆரோக்கியத்தை காக்கும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் !!
, வெள்ளி, 11 மார்ச் 2022 (09:29 IST)
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.


ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும். மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெய்யில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

4 அல்லது 5 வெங்காயத்தை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர பித்தம் குறையும். இலவங்கப்பட்டை ஒன்றரை பலம் வால்மிளகு கால் பலம் பொடித்து 3  வேளை நெய்யில் கலந்து  சாப்பிட இருமல் தீரும்.

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும். சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுகுடித்தால் பாலுறவில் பாதிப்பா?