Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரும அழகை பராமரிக்கும் சிறந்த மருத்துவகுணம் கொண்ட மஞ்சள் !!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (14:18 IST)
மஞ்சள் சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டது. அதுவும் இது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குவதைத் தவிர, சருமத்திற்கும் நன்மைகளை அளிக்கிறது.


மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் தான் காரணம். சருமத்தின் நிறத்தை அதிகரிக்க நினைப்பவராயின், மஞ்சளைக் கொண்டு சரும நிறத்தை எளிதில் கூட்டலாம்.

மஞ்சள் சரும நிறத்தை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமின்றி, முகப்பரு, சரும சுருக்கங்கள், தழும்புகள் போன்றவற்றையும் தடுக்க உதவுகிறது. சில எளிய மற்றும் சருமத்தில் மாயத்தை ஏற்படுத்தும் சில மஞ்சள் ஃபேஸ் பேக்குகளை கொடுத்துள்ளோம். அவற்றை தினமும் இரவு பயன்படுத்தினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முகத்தில் உள்ள கருமையைப் போக்க 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவவேண்டும். இந்த மாஸ்க்கை போட்டு வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பருக்கள் அதிகம் உள்ளவர்கள், இந்த ஃபேஸ் பேக் சரியாக இருக்கும். இதற்கு 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, பேஸ்ட் செய்ய சிறிது நீர் அல்லது பாலை ஊற்றி கலந்துக்கொள்ள வேண்டும்.

பின் அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments