Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிகச்சிறந்த கிருமி நாசினியாக பயன்படும் மஞ்சள்...!!

மிகச்சிறந்த கிருமி நாசினியாக பயன்படும் மஞ்சள்...!!
மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். உடலில் வெட்டு காயங்கள், தீக்காயங்கள், மற்றும் புண்களில் மஞ்சள் சிறந்த மருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது.

தமிழர்களின் வாழ்விலும், உணவிலும் மற்றும் மருத்துவத்திலும் மஞ்சள் நீங்கா இடம் பெற்றுள்ளது. குறிப்பாக பெண்கள் மஞ்சள் தேய்த்து குளித்தால் முகம் பளபளப்பாக இருக்கும். ஆனால் இந்த மஞ்சள் பெண்களின் அழகை மெருகேற்றுவதற்கு மட்டுமல்ல,  இதில் அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ நன்மைகள் ஆண்களுக்கு சமமாகும்.
 
உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை மஞ்சளுக்கு உண்டு. முகப்பருக்கள்,  கொப்பளங்கள், இவைகளை போக்க மஞ்சள் சிறந்தது.
 
பாலில் மஞ்சளை சேர்த்து குடித்து வந்தால் உடல் இரதம் சுத்தமாவதோடு இதய நோயை கட்டுப்படுத்துகிறது. முட்டையும் ,மஞ்சளும் நல்ல சூடு பாலில் சேர்த்து  குடித்து வந்தால் நெஞ்சு சளி, இரும்பல், விரைவில் குணமாகும்.
 
தினமும் முகத்திற்கு மஞ்சளுடன் சிறிது கடலை மாவு மற்றும் பால் ஆடை சேர்த்து தடவி வந்தால் முகம் பள பளப்பதோடு முகத்தில் கருமை மற்றும் காயங்கள்  நீங்கிவிடும்.
 
மஞ்சளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை உண்டு. தினமும் மஞ்சளை உணவில் பயன்படுத்தி வந்தால் நீரிழிவு பிரச்சனை எளிதில் குணமாகிவிடும்.
 
மஞ்சளை உணவில் சேர்த்தால் நல்ல பசி உண்டாகும்.  மஞ்சளை சிறிது எலும்பிச்சை சாறில் தேய்த்து முகத்தில் பருக்கள் உண்டாகும் இடத்தில் தடவினால்  ஆரம்பத்திலேயே பருக்கள் உண்டாவதாகி தடுக்கலாம்.
 
மஞ்சளுடன் சிறிது வேப்பிலை அரைத்து தேய்த்தால் அம்மையால் ஏற்பட்ட தழும்புகள் மறையும். மஞ்சளுடன் சிறிது வேப்பிலை மற்றும் வசம்பு சேர்த்து அரைத்து  தேய்த்தால் மேகப்படை, வட்டமான படைகள் மற்றும் விஷக்கடிகள் குணமாகும்.
 
சோற்று புண் நீங்க மஞ்சளுடன் கடுக்காய் சேர்த்து பூச வேண்டும். மஞ்சள், சுட்ட சாம்பல், மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து பூசி வந்தால் ஆறாத புண்களும்  ஆறிவிடும்.
 
மஞ்சளை பற்பொடியாக உபயோகித்தால், பற்கள் ரீதியான பிரச்சனைகள் நீங்கும் மற்றும் பற்களில் ஏற்பட்டுள்ள சொத்தையில் அல்லது பல்லில் பூச்சி உண்டாகியுள்ள இடத்தில் மஞ்சள் தூளை நன்கு வைத்து தேய்த்து வந்தால் பற்களில் உண்டாகிய பூச்சிகள் விரைவில் அழிந்து பற்கள் அரிப்பை குறைத்து விடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 147 ஆக உயர்வு!