Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நகங்களின் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாட்டை தவிர்க்க என்ன செய்யவேண்டும்....?

நகங்களின் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாட்டை தவிர்க்க என்ன செய்யவேண்டும்....?
நகங்கள் அழகு சம்பந்தபட்டது மட்டுமல்ல. ஆரோக்கியம் சம்பந்தம் பட்டதும் கூட. நகத்தை பாதுகாக்கவும் பராமரிக்கவும் சில இயற்கை குறிப்புகளை பார்ப்போம். நகங்களை ஈரமாக இருக்கும்போது வெட்டகூடாது. அப்படி வெட்டினால் சரியான ஷேப் கிடைக்காமல் போக வாய்ப்பு  உள்ளது.
மாதம் ஒருமுறையாவது நகங்களின் மேல் பாதாம் எண்ணெய் அல்லது கிளிசரின் கலந்த எலுமிச்சை சாறு பூசி அதனை சிறிது நேரம் கழித்து கடலை மாவினால் கழுவவேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் நகம் பளபளப்பாகும்.
 
மருதாணி வைப்பது, ஆலிவ் எண்ணெய்யை தேய்த்தல் போன்றவற்றை செய்து வந்தால் நகங்கள் எளிதில் உடைந்து போகாமல் இருக்கும். தினந்தோறும் தேவையான அளவு, தண்ணீர், பழரசங்கள் போன்றவற்றை அருந்துவதும் நகத்திற்கு வலிமை தரும். 
 
நகங்களை எப்போதும் பற்களால் கடிக்க கூடாது. துணி துவைக்க, பாத்திரம் கழுவ தரமான சோப்புகளையே பயன்படுத்துங்கள். தரமில்லாத  சோப்புகளால் நகங்கள் பழுதாக கூடும்.
 
சிலருக்கு நகங்கள் வளர்வது குறைவாக இருக்கும். அவர்கள் மாதம் ஒருமுறை மெனிக்யூர், பெடிக்யூர் செய்வதால் விரல்களில் ரத்த ஓட்டம்  ஏற்பட்டு நகவளர்ச்சி ஏற்படும்.
 
ஊட்டச்சத்து குறைபட்டாலும் கூட நகவளர்ச்சி குறைபடலாம். இதற்கு புரோட்டீன் அதிகமுள்ள உணவுகள், வைட்டமின் ஏ, கால்சியம், துத்தநாகம், வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவதனால் நல்ல பலன் ஏற்படும். கூடவே உடல் ஆரோக்கியமும்  மேம்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எலுமிச்சை பழத்தோல்; எப்படி...?