கற்றாழை குளிர்ச்சி தன்மை உடையது. இதனை இரவு தூங்க செல்லும் முன்பு முகத்தில் தடவி விடவும். பின்பு, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்தால் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
இரவு தூங்க செல்லும் முன்பு விட்டமின் இ மாத்திரையில் இருந்து சிறிது எண்ணெய்யை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு காலையில் எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளிச் என காணப்படும்.
வெள்ளரிக்காயில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளது. எனவே, இரவு தூங்க செல்லும் முன்பு வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி விடவும். பின்பு காலை, எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வந்தால் முகம் பொலிவுடன் காணப்படும்.
பாதாம் எண்ணெயிலும் ஈரப்பதம் உள்ளது. எனவே, இதனையும் இரவு முகத்திற்கு தடவி மசாஜ் செய்து காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வரலாம்.
முகத்திற்கு பேக் போட நமக்கு தேவையான பழங்களை தேர்ந்தெடுக்கவேண்டும். கேரட், ஆப்பிள், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, தேன், வெள்ளரி, ஸ்ட்ராபெரி, பேரீச்சம் பழம், எலுமிச்சைச்சாறு சிறிதளவு இவற்றில் ஏதாவது ஒன்றை நன்றாக அரைத்து பேக் போட்டு அரைமணி நேரம் ரிலாக்ஸ் ஆக இருக்கவேண்டும்.
பின்னர் முகம் கழுவினால் உங்கள் முகத்தைப் பார்த்து நீங்களே அசந்துபோவீர்கள். அந்த அளவிற்கு முகம் பொலிவாய் மாறும். பழங்களை தனியாகவும் அரைத்து பேசியல் போடலாம் அல்லது இரண்டு, மூன்று பழங்களைச் சேர்த்து அரைத்தும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.