Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கை பொருட்களை பயன்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க டிப்ஸ் !!

Webdunia
உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயை மைய அரைத்து முகத்தில் அப்ளை செய்து வட்டப் பாதையில் மசாஜ் செய்யுங்கள். 3-5 நிமிடங்களுக்குச் செய்தால் எண்ணெய்  பிசுக்கு நீங்கும். குளிர்ந்த நீரில் கழுவிவிடுங்கள்.
 
காஃபி பொடி: 1 ஸ்பூன் தயிருடன் காஃபி பொடி கலந்து முகம் முழுவதும் தடவி ஸ்கிரப் செய்யுங்கள். 2 நிமிடங்கள் செய்துவிட்டு 5 நிமிடங்கள் காய வையுங்கள்.  பின் குளிர்ந்த நீரில் கழுவலாம்.
 
ஓட்ஸ்: ஓட்ஸ், தயிர், தேன் மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்கு கலக்குங்கள். பின் முகத்தில் 4 நிமிடங்கள் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அடுத்ததாக 10 நிமிடங்கள் காய வைத்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
 
கிரீன் டீ: கிரீன் டீ பைகளை 2 எடுத்துக்கொள்ளுங்கள். பையை கிழித்து காய்ந்த கிரீன் டீ இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எலுமிச்சை சாறு சில துளிகள், சர்க்கரை 2 ஸ்பூன், சுடு தண்ணீர் சிறிதளவு என எடுத்து கலந்துகொள்ளுங்கள். பின் முகத்தில் அப்ளை செய்து வட்டப்பாதையில் மசாஜ் செய்யுங்கள். 4  நிமிடங்களுக்கு செய்யுங்கள். பின் குளிந்த நீரில் கழுவிவிடுங்கள்.
 
தேன்: தேன் 1 ஸ்பூன் , எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன் மற்றும் பாதாம் கொட்டையை மொறமொறப்பாக அரைத்து மூன்றையும் ஒன்றாகக் கலந்து ஸ்கிரப் செய்யுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். எண்ணெய் பிசுபிசுப்பு அகலும்.
 
ஐஸ்: ஐஸ் நீர் அல்லது ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வர, முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படுவதோடு சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, எண்ணெய் பசை வெளிவருவதைத் தடுக்கலாம்.
 
புதினா: சிறிது புதினா இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து, பின் அதனை காட்டன் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து  எடுக்கலாம். இதுவும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments