Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 2 April 2025
webdunia

மூலிகைகளை கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குறிப்புகள் !!

Advertiesment
சமையலறை பொருட்கள்
துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்க உதவும். சிறுநீரகம் சுத்தமாகும். இந்த இயற்கை பானம்  சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

தயாரிப்பு முறை: ஒரு பாத்திரத்தில் நீரில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கினால்  பானம் தயார். அடிக்கடி சளி பிடிப்பவர்கள் இந்த நீரை குடித்து வந்தால், அதில் உள்ள மருத்துவ குணங்கள் நுரையீரலில் உள்ள அழற்சி மற்றும் சளித் தேக்கத்தைக் குறைத்து, சளி பிடிப்பதைத் தடுக்கும்.
 
துளசி பானத்தை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் அமைதியாகி, மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் அடிக்கடி மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டு வந்தால், இந்த பானம் குடலியக்கத்தை மேம்படுத்தி அப்பிரச்சனையை உடனடியாக  தடுக்கும்.
 
துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி பிரச்சனையைக்  குறைக்கும்.
 
இந்த இயற்கை பானத்தில் உள்ள மருத்துவ குணங்கள், வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்து, அல்சர் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். செரிமானம் மேம்படும்
 
மஞ்சள் கலந்த துளசி நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும். தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியில் இருந்து விடுபடலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகத்தை பராமரிக்க உதவும் செவ்வாழையின் பயன்பாடுகள் என்ன..?