Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பற்களில் உள்ள கறைகளை எளிதில் நீக்க உதவும் குறிப்புகள்...!!

Webdunia
அன்றாட உணவில் கேரட், பேரிக்காய், ஆப்பிள், அத்திப்பழம் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு உறங்கும் முன் பல் துலக்குவது அவசியமான ஒன்றாகும். இவை பற்களில் உள்ள கறைகளை நீக்க உதவும்.

* கொய்யா பழம், ஸ்ட்ராபெரி பழம் உண்பதால் பற்களில் உள்ள கறை நீங்கும். கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து ,அந்த நீரை கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
 
* இரவு தூங்குவதற்கு முன்பு, ஆரஞ்சு பழ மேல் தோலைபற்களில் தேய்த்து விட்டு படுத்து, மறுநாள் காலை எழுந்தவுடன் நீர் விட்டுக் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது பற்களின் மேலும், பற்களின் உட்புறத்தில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
 
* வெள்ளை எள்ளு விதையை, நன்றாக தூளாக்கி பற்க்களின் மேல் தேய்த்து வந்தால், பற்களின் மேல் உள்ள கறைகள் நீங்கும். பேக்கிங் சோடா , கல் உப்பு  இரண்டையும் ஒன்றாக கலந்து பற்களின் மீது தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
 
* மிக முக்கியமாக உணவை நன்றாக ,மென்று, அரைத்து, விழுங்க வேண்டும். கிராம்பு பொடியுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து வைத்து மிதமான சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சோப் பல நபர்களா? சரும நலன் காக்க விழிப்புணர்வு தேவை!

முடி உதிர்வுப் பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவத் தீர்வுகள்: அலோபேசியா, பூஞ்சைத் தொற்று, பொடுகு நீங்க எளிய வழிகள்!

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இரவு உணவில் சேர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்!

ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு உதவும் அத்தியாவசிய உணவுகள்: ஒரு விரிவான வழிகாட்டி!

மருக்களை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள்: நிரந்தர தீர்வுக்கான வழி!

அடுத்த கட்டுரையில்
Show comments