Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள துத்தி கீரை!!

Webdunia
துத்திச் செடியின் வேரை நன்றாகக் கழுவி நீரில் ஒரு பதினைந்து நிமிடம் கொதிக்கவிட்டு வடிகட்டி பருகிவந்தால் உடலின் நரம்பு மண்டலம் பலமடையும். துத்தி வேருடன் மூக்கிரட்டை வேரையும் சேர்த்து காய்ச்சி சிறிது தேன் கலந்து பருகிவர சிறு நீரக கோளாறுகள் சுகமாகும்.

துத்தி இலையை சின்ன வெங்காயம், பாசிப் பருப்புச்சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.துத்தி இலையை அரைத்து தோசைமாவில் கலந்து  தோசையாகச் செய்தும் சாப்பிடலாம். முழங்கால், கால் பாதம் போன்ற இடங்களில் சிறுநீரகக் கோளாறுகளால் வீக்கம் ஏற்படும்போது, துத்தி இலையை நீரில் போட்டு வேகவைத்து அதில் துணியை நனைத்து வீக்கம் உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் குறையும்
 
துத்தி இலையையும் வேலிப்பருத்தி இலையையும் சமஅளவில் எடுத்து அதனை சாறு பிழிந்து (200 மில்லி அளவுக்கு) அந்தச் சாற்றால் பல் கூச்சம், பல் வலி, ஈறுகளில் ரத்தம் கசிவது போன்ற துண்பங்களில் இருந்து விடுதலை பெறலாம்.
 
நாள் முழுதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதாலும், நீண்ட தூரம் பயணம் செய்வதாலும், புரோட்டா போன்ற துரித உணவுகளை உண்பதாலும் ஏற்படும்  மலச்சிக்கலுக்கும் இது அரு மருந்து. துத்தி இலையில் சூப் செய்தோ, இதன் சாற்றுடன் பால், தேன் கலந்தோ சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும்.
 
நாட்பட்ட வெளி மூலம் இதத்த மூலம் உள்ளவர்கள்,துத்தி இலையை ஆமனக்கு எண்ணெய்யில் வதக்கி ஒரு வெற்றிலையில் வைத்து ஆசனவாயில் வைத்து  கட்டிக்கொண்டு வர நாட்பட்ட மூல வியாதி குணமாகும்.
 
அடுத்தது துத்தி பூ.இதை நிழலில் நன்றாக உலர்த்தி பொடியாக்கி அதனுடன், பாலும் பனங்கற்கண்டும் சேர்த்து பருகிவந்தால் நுரையீரல் கபம், இருமல், இரைப்பு, காசநோய், இரத்த வாந்தி முதலியவை குணமாகும்.
 
துத்திக்காயில் உள்ள விதைகளை இடித்து பொடியாக்கி, அதனுடன் கற்கண்டும், தேனும் சேர்த்து சாப்பிட்டு வர வெண்மேகம், உடற்சூடு, கைகால்களில் படரும் சரும நோய்கள், வெள்ளை படுதல் ஆகியவையும் குணமாகும்.
 
கடைசியாக முக்கியமான விஷயம், துத்திபூவை, காம்பு, மொக்குகளோடு சேர்த்து பறித்து அதை சிறிது கருப்பட்டி சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் ஆண்மை  பெருகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நீரிழிவு பாதம் வெட்டி அகற்றப்படுவதை தடுக்கும் உத்திகள்! - புரொஃபசர் M. விஸ்வநாதன் வழங்கிய உரை!

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

அடுத்த கட்டுரையில்
Show comments