Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ள மாசிக்காய் பொடி...!!

அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ள மாசிக்காய் பொடி...!!
பெண்களுக்கே உண்டான ஒரு இயற்கை வரம் தாய்மை ஆகும். பெண்களுக்கு மாதந்தோறும் வெளியேறும் மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் பல பெண்களுக்கு. அவர்கள் இந்த மாசிக்காய் பொடியை தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட்டு வர மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்படுவது நிற்கும். 
 

கருப்பையில் இருக்கும் அழுக்குகள், நச்சுக்கள் நீங்கும். கருப்பை பலம் பெறும். மாசிக்காய் பொடியை குடிநீரில் கலந்து வாய்கொப்பளித்து வர நாக்கில் இருக்கும்  புண்கள் ஆறும்.
 
மாசிக்காய் பொடியை நீர்விட்டு நன்கு குழைத்து ஆசனவாயில் மூலம் பாதிப்பால் ஏற்பட்ட புண்கள், கட்டிகள் போன்றவற்றின் மீது தடவி வர சிறந்த நிவாரணம்  அளிக்கும். 
 
தேமல், படை, சொறி, சிரங்கு போன்றவற்றின் மீதும் மாசிக்காய் பொடியை தினமும் நீரில் குழைத்து தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
 
மாசிக்காய் பொடியை ஒரு சிட்டிகை அளவு எடுத்து அதை தேனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு குணமாகும்.
 
டான்சில்ஸ், இருமல், தொண்டைக்கட்டு மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் நமது சுவாசப்பாதைகளில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மாசிக்காய் பொடியை, கற்பூரவள்ளி இலை சாற்றுடன் கலந்து சாப்பிட இப்பிரச்னைகளிலிருந்து சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலச்சிக்கல் பிரச்சனைக்கு எளிதில் தீர்வு தரும் கொய்யா பழம்...!!