Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல நோய்கள் வராமல் காக்கும் அற்புத மூலிகை துத்தி கீரை !!

Webdunia
துத்திக் கீரைகளில் கருந்துத்தி, சிறு துத்தி, நிலத்துத்தி, பெருந்துத்தி என சில வகைகள் இருக்கின்றன. அனைத்து வகை துத்தியும் ஒரே மாதிரியான மருத்துவ குணத்தை கொண்டுள்ளது.

துத்திக் கீரை உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு பயிராகும். மொத்தம் 20 வகையான துத்தி இனங்கள் உள்ளன. துத்திக் கீரையின் இலை, பூ, காய், முதலிய பாகங்கள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
துத்தி வேருடன் மூக்கிரட்டை வேரையும் சேர்த்து காய்ச்சி சிறிது தேன் கலந்து பருகிவர சிறு நீரக கோளாருகள் சுகமாகும். துத்தி இலையை சின்ன வெங்காயம்,  பாசிப் பருப்புச்சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். துத்தி இலையை அரைத்து தோசைமாவில் கலந்து தோசையாகச் செய்தும் சாப்பிடலாம்.
 
முழங்கால், கால் பாதம் போன்ற இடங்களில் சிறுநீரகக் கோளாறுகளால் வீக்கம் ஏற்படும்போது, துத்தி இலையை நீரில் போட்டு வேகவைத்து அதில் துணியை  நனைத்து வீக்கம் உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் குறையும்
 
துத்திக் கீரை இது சிறுநீரைப் பெருக்கும், மலத்தை இளக்கும். உடலுக்கு ஊட்டமளிக்கும். இக்கீரை குறிப்பிட்ட நோய்களைத் தீர்க்கும் தன்மை கொண்டது. உடலுக்கு  ஊட்டமளிப்பதால் நோய் எதிர்ப்புச்சக்தியை உண்டாக்கிப் பல நோய்கள் வராமல் காக்கிறது.
 
மூலநோய், கட்டிகள், புண்கள், முழுமையாக நிவாரணம் பெறு உதவுகின்றது. எலும்பு முறிவுக்குச் சிறந்த மருந்தாகப்பயன்படுகிறது. துத்திக் கீரையை உணவில்  சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் அளிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments