Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடல் வெப்பத்தால் உண்டாகும் எல்லா நோய்களையும் நீக்கும் துத்திக்கீரை !!

Advertiesment
உடல் வெப்பத்தால் உண்டாகும் எல்லா நோய்களையும் நீக்கும்  துத்திக்கீரை !!
, சனி, 30 ஏப்ரல் 2022 (16:36 IST)
கீரைகளைப் போலவே இதனையும் பொரியல் கடையல் செய்து சாப்பிடலாம். இது உடல் நலத்திற்குப் பாதுகாப்பானதாகும். கீரை வகையைச் சேர்ந்த இந்த துத்தியில் கருந்துத்தி, சிறுதுத்தி, நிலத்துத்தி, இலைகள் துத்தி என பலவகை உண்டு.


துத்திக் கீரை மூல நோயாளிகளுக்குக் கைகண்ட மருந்தாகப் பயன்பட்டு நிவாரணம் அளிக்கிறது. துத்தி இலையைக் கொண்டு வந்து சுத்தம் செய்து காரமில்லாத சுத்தமான அம்மியில் மைப்போல அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தினசரி ஒரு மாதம் விடாமல் குடித்து வந்தால் மூலம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

எலும்பு முறிவுக்கு இது சிறந்த பலனளிக்கும் மூலிகையாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் முதலில் எலும்பை ஒழுங்குபடுத்திக் கட்டவேண்டும். இந்த இலையை நன்றாக அரைத்து மேலே கனமாகப் பூசி அதன்மேல் துணியைச் சுற்றி அசையாமல் வைத்திருந்தால் வெகுவிரைவில் முறிந்த கலும்பு ஒன்று கூடி குணமாகும்.

துத்தி கீரை வெந்ததும் அந்நீரை வடிகட்டி, சிறிது சர்க்கரைப் போட்டு பசும் பாலைச் சேர்த்துச் சாப்பிடவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆசனக் கடுப்பு அகன்றுவிடும். மேகச் கடுகுணமாகும்

துத்தி இலையைக் கொண்டு வந்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி கஷாயம் தயார் செய்து கொள்ளவும். இதனை குடற்புண்ணால் பாதிக்கப்பட்டவர் தினசரி மூன்று வேளை சர்க்கரைக் கலந்து கஷாயத்தைக் குடித்து வந்தால் பூரணகுணம் பெறலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல்வேறு நோய்களுக்கு அற்புத நிவாரணம் தரும் சித்தரத்தை !!