அஜீரணம் குணமாக வேறு எந்த ஒரு பொருளையும் தேடி போக தேவையில்லை. வீட்டில் கண்டிப்பாய் இருக்கக்கூடிய மஞ்சள்தூள் கொண்டே குணபடுத்தக் கூடிய எளிமையான ஒரு மருத்துவம் இது. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் குணமாகும்.
இஞ்சியை தோல் நீக்கி தட்டி(அரைத்து) சாறு எடுத்து அதை நன்றாக தெளிய வைத்து இறுத்து சுத்தமான இஞ்சி சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் கருப்பட்டி போட்டு கருப்பட்டி கரையும் வரை கலக்க வேண்டும். கருப்பட்டி கரைந்ததும் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். அதில் ஓமம் கலந்து குடித்தால் வயிற்று கோளாறு மட்டுப்படும். குடிக்க இதமாகவும் இருக்கும்.
அஜீரண கோளாறு ஏற்பட்டால் வெற்றிலையுடன் (பாக்கு சுண்ணாம்பு இல்லாமல்) நான்கு மிளகு சேர்த்து மென்று தின்றால் அஜீரணக்கோளாறு சரியாகும்.
அஜீரணம் குணமாக கறிவேப்பிலை, சுக்கு, சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் போல் அரைத்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகும். அஜீரணம் ஏற்படும் சமயங்களில் சாப்பிட தோணாது. எளிதில் ஜீரணம் ஆக கூடிய இட்லியுடன் இந்த துவையல் சேர்த்து சாப்பிடலாம்.
அஜீரணத்திற்க்கு வெறும் சீரகத்தை மட்டும் நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த சீரக நீரை குடித்து வர நன்கு ஜீரணம் ஆவதோடு, உடலும் குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணத்தினால் அஜீரணம் ஏற்பட்டிருந்தால் உடனே சரியாகிவிடும்.