Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல வியாதிகளுக்கு மருத்தாகும் வில்வம் !!

பல வியாதிகளுக்கு மருத்தாகும் வில்வம் !!
வில்வப்பழம் இதயத்திற்கு வலு சேர்க்கிறது. வில்வப் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். வில்வப்பழம் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் வில்வப்பழத்தைச் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை அழகாக இருக்கும்.

வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் ஒரு சிறந்த மருத்தாகும். வில்வ பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். சிறுநீர் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். தாய்மார்களுக்கு தாய்ப்பாலை பெருக்கும். மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகளை குணமாக்கும். சிறுநீரக கற்களைக் கரைக்கும்.
 
உலரவைத்த வில்வப்பழம் ஒரு 5 கிராம் அளவுள்ள ஒரு துண்டை எடுத்துக் கஷாயம் போட்டுக் காலை, மாலை இரண்டு வேளைகள் குடித்தால் சீதபேதி குணமாகும். அத்துடன் உடல் உள்ளுறுப்புகளும் சக்தி அடையும்.
 
வில்வ இலை மலத்தைக் கட்டுப்படுத்தும். வயிற்று வலியைப் போக்கும். எல்லாவிதமான மேக நோய்க்கும் வில்வம் அரும் மருந்தாக உள்ளது. எல்லா விதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. வில்வப் பழம் பித்த சம்மந்தமான நோய்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.
 
வில்வத்தின் இளம் தளிர் இலைகளை லேசாக வதக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுக்கக் கண்வலி, கண் சிவப்பு, அரிப்பு என அனைத்தும் குணமாகும்.
 
வில்வ இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமானம் சீராகும். உணவில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் கலந்து உடல் வலுப்பெறும்.
 
வில்வ இலைச் சூரணம் ஒரு தேக்கரண்டியும், கரிசலாங்கண்ணி இலைச்சாறு ஒரு தேக்கரண்டியும் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் விரைவில் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை கொண்டுள்ள கத்திரிக்காய் !!