Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆளிவிதையில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்....!

ஆளிவிதையில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்....!
ஆளிவிதையில் அதிகபடியான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஆளிவிதையை அதிகளவில் உட்கொள்ளும்போது வயிறு மற்றும் குடல் பகுதிகள் நல்லவிதமாக இருக்கும்.
உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாதபோது அதிகமாக ஆளிவிதை உட்கொள்ளும்போது குடல் அடைப்பு ஏற்பட நேரிடும் ஆளிவிதையின்  எண்ணெய்யை சரும பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.
 
மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்களுக்கு இதில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலில் உள்ள அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும். இதேபோல சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமலும் ஆளிவிதை பாதுகாக்கிறது. 
 
மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் ஆளிவிதைக்கு  உள்ளன.
 
ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்துச் சாப்பிட்டு வந்தால், இதயத்தைக் காப்பாற்றுகிறது. இரண்டாவது மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூன்றாவது புற்று நோய் வராமல் தடுக்கிறது.
 
ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம் என்று மூன்று உயிராற்றலைச் சுறுசுறுப்பாக்கும் சத்துக்களும் உள்ளன. நாம் சாப்பிடும் சில உணவுகளில் ஒமேகா-3ம், நார்ச்சத்தும் இருக்கின்றன. ஆனால், லிக்னன்ஸ் கிடையாது. ஆளிவிதையில் மட்டுமே  இது உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த வெந்தயக் கீரை...!!