Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்து உப்பில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத பலன்களும் !!

Webdunia
சனி, 7 மே 2022 (14:45 IST)
இந்து உப்பு பாறைகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு தண்ணீரிலும், இளநீரிலும் ஊறவைத்த பின்னரே இயற்கையாக விற்பனைக்கு வருகிறது.


சாதாரண உப்பில் இருப்பதைப் போலவே இந்து உப்பில் அயோடின் சத்து, பாஸ்பரஸ், சோடியம் குளோரைடு, மெக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், இரும்பு, துத்தநாகம், போன்ற சத்துக்கள் இருக்கின்றது.

எளிதில் செரிமானமாகும் திறன் உள்ளது. மலம் கழிப்பதில் கடினம் இருந்தால் அதனைச் சரி படுத்துகிறது. நம் வயிற்றில் உள்ள குடல் உணவை நன்றாக உறிஞ்சி சத்துக்களை நம் உடலுக்கு அளிக்கின்றது.

இளஞ்சூடான வெந்நீருடன் இந்துப்பை கலந்து வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் பல் வலி ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும். நாக்கின் ருசி தன்மையை அதிகப்படுத்தும்.

நம் குளிக்கும் நீரில் உப்பைப் போட்டுக் குளித்து வர நம் உடம்பிற்குத் தேவையான இரும்புச் சத்தை தருகிறது. தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது. இதனால் நமக்கு நிம்மதியான உறக்கம் கிடைப்பதுடன் தைராய்டு பிரச்சினைக்கும் தீர்வாக இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

தொண்டை வலி மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்கிறது. மூக்கு, காது, ஆஸ்துமா பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments