Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முகத்தை பட்டுப்போல் மென்மையாக்கும் இயற்கை அழகு குறிப்புகள்...!

Advertiesment
முகத்தை பட்டுப்போல் மென்மையாக்கும் இயற்கை அழகு குறிப்புகள்...!
* தக்காளி சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கருவளையம் சிறிது நாளில்  மறைந்துவிடும்.
* முகம் மற்றும் மேனி அழகிற்கு கடலை பருப்பு கால் கிலோ, பாசி பயறு கால் கிலோ, ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம் என மூன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்.
 
* முகப்பரு தழும்பு மாற புதினா சாறு 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், பயத்தம் பருப்பு மாவு இவற்றை கலந்து போட்டால் தழும்பு மாறும்.
 
வெள்ளரிச்சாறு இரண்டு ஸ்பூன், துளசிச்சாறு இரண்டு ஸ்பூன், புதினா சாறு அரை ஸ்பூன், எலுமிச்சம் பழசாறு அரை ஸ்பூன் எடுத்து நன்றாக கலக்கி முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பட்டுப்போல் மென்மையாக இருக்கும்.
 
* உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
 
* பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி அந்த வியர்வையை துடைக்காமல் காயவிட்டு, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அற்புத மருத்துவ குணங்களை கொண்ட புதினா...!