Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவில் சர்க்கரையை அதிகம் சேர்க்கப்படுவதால் உண்டாகும் பாதிப்புகள்...!!

Webdunia
சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்திலாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.
அதிக சர்க்கரை சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி சர்க்கரை நோய் வருகிறது. சர்க்கரை உடம்பிலுள்ள ஒவ்வொரு  உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. 
 
டின் பானங்கள் செயற்கை சத்துணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கீரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக  மாற்றுகிறீர்கள்.
 
இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு  பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.
 
உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதை சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும்  இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான பொரோஸ்டேகிளேண்டின் E2க்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது  புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.
 
ரத்தத்திலுள்ள அதிகப்படியான சர்க்கரை ரத்தக்குழாய் சுவர்களைத் தடிக்கச் செய்யும். இதயத்துக்கு அதிக அழுத்தம் உண்டாகும். அதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியன வரும். அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு  உண்டாக்குகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் என்ன? போக்க எளிய வழிகள்!

அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments