Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நோய்கள் வராமல் பாதுகாத்துக்கொள்ள உதவும் மூச்சு பயிற்சி!!

நோய்கள் வராமல் பாதுகாத்துக்கொள்ள உதவும் மூச்சு பயிற்சி!!
உடல் ஆரோக்யத்தை மேன்மைபடுத்துவதில் முக்கியபங்கு வகிப்பது மூச்சு பயிற்சி.  மனிதனின் ஆயுள் காலம் அவன் விடும் மூச்சு தான்  தீர்மானிக்கிறது. வேகமாக மூச்சை இழுத்து விரைவாக வெளிவிடப்படும் மூச்சு தன்மையால் ஆரோக்கிய சீர்கேடுதான் உண்டாகும். ஆழ்ந்து  மூச்சுவிட்டால் உடல் உறுப்புகளின் இயக்கம் சீராக இருக்கும்.
நாம் முறையாக சுவாசிக்கிறோமோ என்பதை உணரும் நேரம் கூட இல்லாமல் ஓடிக் கொண்டேயிருப்பதன் விளைவுதான் இன்று நம்மை ஆக்கிரமித்திருக்கும் நோய்கள். எவ்வித சிகிச்சையும் இல்லாமலேயே இருக்கும் நோய்களின் தீவிரத்தைக் குறைக்கவும், நோய்கள் வராமல் பாதுகாத்துகொள்ளவும் மூச்சு பயிற்சியை முறையாக செய்தால் போதும்.
 
பொதுவாக  மனிதன்  இயல்பு நிலையில் 15 முறை மூச்சு விடுகிறான். ஆனால் பதட்டம், கோபம்  நிறைந்திருக்கும் நேரங்களில் இதன்  எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. எத்தகைய சூழலிலும் மூச்சு விடும் அளவு ஒரே சீராக இருக்கும்போது  நிமிடத்துக்கு 10 முறை என்னும்  எண்ணிக்கையில் வந்து நிற்கும். 
 
தினமும் அதிகாலையிலும் மாலையிலும் தொடர்ந்து 10 நிமிடங்கள்  மூச்சு பயிற்சி செய்தால் போதும். மூச்சு பயிற்சி என்பது யோகாசனம்,  தியானத்தோடு தொடர்பு உடையது.
 
மூச்சு பயிற்சி செய்யும் முறை:
 
காலை நேரங்களில் காற்று தூய்மையாக இருக்கும். அதிகாலையில் ஒரு தம்ளர் நீர் அருந்தி காற்றோட்டமுள்ள இடத்தில் அமர்ந்துகொள்ள வேண்டும். கீழே விரிப்பை விரித்து முதுகுத்தண்டு வளையாமல் நிமிர்ந்து உட்கார வேண்டும். இடது நாசியை விரல்களால் மூடி வலது நாசி  வழியாக மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து இப்போது வலது நாசியை விரல்களால் மூடி இடது நாசி வழியாக மூச்சை வெளியே  விடவேண்டும்
 
இந்தப் பயிற்சிக்கூட சிரமம்தான் என்பவர்கள் மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து. நுரையீரல் வரை நிரப்பி, சில நொடிகள் நிறுத்தி மீண்டும்  வெளியே  பொறுமையாக விடவேண்டும். இது எளிய பயிற்சியே. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் செய்யலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளை தடுக்கும் உணவுகள்...!!