Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பாகங்களும் அற்புதமான மருத்துவகுணம் நிறைந்து காணப்படும் முருங்கை !!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (15:55 IST)
முருங்கை வேரை இடித்து சாறு பிழிந்து அதனுடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து குறிப்பிட்ட அளவு அருந்தினால் இரைப்பு, விக்கல், முதுகுவலி போன்ற நோய்கள் நீங்கும்.


முருங்கை பட்டையை நன்றாக பொடித்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து கட்டினால் வீக்கம் குறையும். சிறுநீரை தெளிய வைக்கும்.

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும். வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் மூல நோய்க்கு மிக சிறந்த மருந்தாகவும் . சளியைப் போக்கும் தன்மைகொண்டதாகவும் இருக்கிறது.

முருங்கைக்காய் பொதுவாக அதிக சத்துக்களை கொண்டது. முருங்கைக் காய் பொரியல் அனைவருக்கும் பிடித்த உணவு ஆகும், தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது.முருங்கை பூவை பாலில் வேகவைத்து- பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.

இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை எலும்புகளை வலுபடுத்தும். முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும்.

முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் கல்சியம் உள்ளது எனவே இதை சாப்பிட்டால் இரத்த சோகை நோய் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகளவு எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பது நல்லதா?

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments