Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீர்க்க ஸ்வாச முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள்...!

தீர்க்க ஸ்வாச முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள்...!
தீர்க்க என்றால் ஆழமான என்றும், ஸ்வாச என்றால் மூச்சு என்றும் பொருள்படுகிறது. இந்த முத்திரை சுவாச கொள்ளளவை அதிகப்படுத்துவதால் தீர்க்க ஸ்வாச முத்திரை என்று அழைக்கப்படுகிறது. அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். இரண்டு  கைவிரல்களையும் ஒன்றாக இணைத்து நீட்டி வைக்கவும். மற்ற விரல்கள் மடங்கி இருக்கட்டும்.
கைகளின் பெருவிரல்கள் இரண்டும் மூளையோடு நேரடியாக தொடர்புடையதால், இம்முத்திரையில் இடது கை கட்டை விரலின் கீழ் பகுதியில் வலது கை கட்டை விரல் வரும்படி விரல்களை கோர்த்தால் மூச்சு வலது ராசியில் வரும். அதே போல் வலது கை கட்டை விரலின்  கீழ்ப்பகுதியில் இடது கை கட்டைவிரல் வரும்படி விரல்களை கோர்த்து வைத்தால் மூச்சு இடது ராசியில் வரும்.
 
இதனால் இந்த முத்திரையோடு பிராணாயாமம் செய்யும்போது, செய்யும் கால அளவில் பாதி நேரம் இடது கை கட்டை விரல், கீழ்ப்பகுதியில் வலது கை கட்டை விரல் வரும்படியும், பிறகு மாற்றி வலது கைகட்டை விரலின் கீழ் இடது கை கட்டை விரல் வரும்படியும் வைத்து  செய்யவும். தீர்க்க ஸ்வாச முத்திரை பிராணாயாம பயிற்சியின்போது இந்த முத்திரையை செய்யலாம்.
 
பயன்கள்: 
 
இடது கை நடுவிரலில் இருந்து செல்லும் நாடி பிங்களா நாடியுடனும், வலது கை நடுவிரலில் இருந்து செல்லும் நாடி இடா நாடியுடனும்  தொடர்பு கொண்டுள்ளதால், இந்த முத்திரையை பிராணாயாமத்துடன் செய்யும்போது இம்முத்திரையில் வரும் கட்டை விரலின் நிலைக்கேற்ப  இடா, பிங்களா நாடிகளில் மின்னோட்டம் அதிகரித்து மூளையில் உள்ள சுவாச மையம் தூண்டப்பட்டு, நுரையீரலின் இயங்கு திறன் அதிகரித்து,  நுரையீரல் நன்கு விரிந்து பிராணாயாமத்தில் மூச்சு காற்றை அதிக அளவில் இழுத்து வெளியிட உதவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாவல் பழத்தில் உள்ள மருத்துவ பயன்கள் என்ன...?