வெறும் வயிற்றில் காபி, டீ போன்ற உற்சாகபானங்களை குடிப்பதை விட குறைந்த கலோரி அளவு கொண்ட எலுமிச்சை தேன் நீர் சிறந்தது.
இந்த நீர் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கின்றது. சிறுநீரை பெருக்கி, மலச்சிக்கலை நீக்கும். செரிமானத்தை தூண்டி, உடல் உள்ளுறுப்புகளின் செயலை அதிகரிக்கும்.
காலை எழுந்தவுடன் பல்துலக்கி பிறகு நான்கு முதல் ஆறு டம்ளர் தண்ணீர் அருந்தலாம். அதனை இளஞ்சூடாகவோ, நன்கு ஆறிய நீராகவோ குடிக்க வேண்டும். ஒவ்வொரு தம்ளர் தண்ணீருக்கு இடையே சில நிமிட இடைவேளையில் குடிக்கவும். தினசரி இரவு உறங்கும் முன் நன்கு வாய் கொப்பளித்து விட்டு உறங்கவும்.
உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி குறையும்.
எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறி, உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவு பெறும்.
எட்டு நடைப்பயிற்சி , எட்டு டம்ளர் தண்ணீர் அவசியம் . எட்டு எட்டாக மனித வாழ்நாளை பிரித்தாலும், ஆரோக்கியத்தை எட்ட இந்த எட்டு களை கடைப்பிடிக்க வேண்டும்.