தினம் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பயன்கள்...!!
வாழைப்பழம் அலர்ஜியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் தீங்கற்ற அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கும்.
அதிகப்படியான இரும்புச்சத்து வாழைப்பழத்தில் இருப்பதால், இதனை சாப்பிட்டால், இரத்த சோகை நீங்கி, இரத்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலை உடனடியாகக் கொடுக்கும். அதனால் தான் விளையாட்டு வீரர்களை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட சொல்கிறார்கள்.
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டால் குடலியக்கமானது சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். மசித்த வாழைப்பழத்தில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுக்கடுப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மது அருந்தியதால் ஏற்படும், தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி, உடலை சீராக இயங்க வைக்கும்.
வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.
தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும். மேலும் செரிமானமும் சீரான நடைபெறும்.
அடுத்த கட்டுரையில்