Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறு நெறிஞ்சில் மூலிகையின் அற்புத மருத்துவ குணங்கள் !!

Advertiesment
சிறு நெறிஞ்சில் மூலிகையின் அற்புத மருத்துவ குணங்கள் !!
சிறு நெறிஞ்சில், பெரு நெறிஞ்சில், யானை நெறிஞ்சில் என 3 வகைப்படும். இவைகள் அனைத்தும் ஒரே மருத்துவ குணங்களை கொண்டவை.


சிறுநீரகம், பித்தபையில் கற்கள் ஏற்படுவதால் வலி ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நெறிஞ்சில் மருந்தாக விளங்குகிறது. 
 
நெறிஞ்சில் உள் உறுப்புகளுக்கு பலம் தருகிறது. அழற்சியை போக்க கூடியது. ஈரலை பலப்படுத்தும் தன்மை கொண்டது. நெறிஞ்சில் முள்ளை பயன்படுத்தி சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்களை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம்.

சிறு நெறிஞ்சில் செடியை துண்டுகளாக்கி சுத்தப்படுத்தி எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறிது  வெட்டி வேர், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீரக, பித்தப்பை கற்கள் கரைந்து  வெளியேறும். கற்கள் வராமல் தடுக்கும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். வெள்ளைப்போக்கு பிரச்சனை குணமாகும்.
 
நெறிஞ்சில் செடியின் பொடி மற்றும் நெறிஞ்சில் முள் ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நெறிஞ்சில் முள்ளை பயன்படுத்தி ஆண் மலட்டு  தன்மையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் நெறிஞ்சில் முள் பொடியுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.  பின்னர், வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடிக்கவும்.
 
இது, ஆண்களுக்கு ஏற்படும் உயிரணு குறைபாட்டை நீக்குகிறது. உயிரணு குறைபாடுள்ளவர்கள் 3 மாதம் தொடர்ந்து எடுத்துவர உயிரணு அதிகரிக்கும். உடலுக்கு  குளிர்ச்சி தருகிறது. உடலுக்கு பலம் கொடுக்கிறது. 
 
சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் குணமாகும். உஷ்ணம் சம்மந்தமான பிரச்னைகள் சரியாகும். 
 
உடல் சோர்வை போக்குவதற்கான மருந்து குறித்து பார்க்கலாம். அரை தேக்கரண்டி அளவுக்கு வெந்தயத்தை எடுத்து வறுத்து பொடித்து கொள்ளவும். இதனுடன்  தேன் அல்லது பால், இனிப்பு சேர்த்து சாப்பிடும்போது உடல் பலம் பெறுகிறது. இதனால் சோர்வு மறைந்து புத்துணர்வு கிடைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்