Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொய்யா இலை கஷாயம் குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

கொய்யா இலை கஷாயம் குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!
கொய்யா மரத்தின் இலை, பழம், வேர், பட்டை என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. கொய்யா இலைகளில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களும் எண்ணற்ற மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.

கொய்யா இலைகளில் கால்சியம், இரும்புச்சத்து, புரதம் பொட்டாசியம் சோடியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம்,வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் உயர்தரமான ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளன.
 
கொய்யா இலை கஷாயத்தை அருந்தி வரும் பொழுது தொண்டைப்புண், தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்று, தொண்டை வலி இருமல் பிரச்சனை குணமாகும். மேலும், கொய்யா இலை கஷாயம் தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்புகளையும் சரி செய்ய உதவும்.
 
கொய்யா இலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் வைட்டமின் சி சத்துக்களும் உடலில் அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்றுக்களை தடுக்கும்.
 
காய்ச்சல் இருக்கும் சமயங்களில் கொய்யா இலைகளுடன் மஞ்சள், மிளகு, துளசி போன்றவற்றை சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வருவதன் மூலம் காய்ச்சல் கட்டுப்படும்.
 
கொய்யா இலை கஷாயத்தை பெண்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக ரத்த போக்கு, கடுமையான வயிற்று வலி குறையும். உடற்சோர்வு, உடல் வலி நீங்கும். கருப்பை பலம் பெறும்.
 
 கொய்யா இலைகளுடன் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கஷாயம் செய்து காலை வெறும் வயிற்றில் அருந்தி வருவதன் மூலம் அதிக ரத்த சர்க்கரை அளவு குறைந்து கட்டுப்படும். கல்லீரல், கணையம், மண்ணீரல் போன்ற உறுப்புக்களின் செயல்பாடு அதிகரிக்கும். இவ்வுறுப்புகள் பலமடையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எள் உருண்டையை தொடர்ந்து உட்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் !!