Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் உண்டாகும் அற்புத பயன்கள் !!

Advertiesment
ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் உண்டாகும் அற்புத பயன்கள் !!
, திங்கள், 28 மார்ச் 2022 (09:22 IST)
ஆவாரம் பூ நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் சிறந்த பணியாற்றுகிறது. ஆவாரம் பூக்களை பறித்து காயவைத்து, பின்பு சிறிது சுத்தமான நீரை அடுப்பில் வைத்து, அதில் நிழலில் உலர்த்தப்பட்ட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் ஆவாரம் பூ தேநீர் தயார்.


இத்தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும். பனங்கற்கண்டு மற்றும் வேறு எந்த இனிப்புகளும் சேர்க்காமலும் இத்தேனீரை பருகலாம்.

ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் பலப்படும். மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.

சில பெண்களுக்கு மாத விடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு, அடிவயிற்றில் வலி மிகுந்து அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. இச்சமயங்களில் ஆவாரம் பூக்களை கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும்.

ஆவரம் பூக்களை சூரிய ஒளியில் உலர்த்தி பொடி செய்து காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும். இதை மூலிகை தேநீராக்கி குடிக்கலாம்.

ஆவாரம் பூ பானம் சிறுநீர் கடுப்பு இருக்கும் போது அதை குறைக்க செய்கிறது. இதனுடைய வேரிலிருந்து தயாரிக்கப்படும் சாறு இயற்கை டையூரிடிக் ஆக செயல்பட்டு சிறுநீரகத்தை பாதுகாக்கிறது.

வெதுவெதுப்பான நீரில் பொடியை சேர்த்து தேனுடன் கலந்து மூலிகை தேநீராக்கி குடிக்கலாம். இது நல்ல மலமிளக்கியாக செயல்படும். ஆவாரம் பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலுக்கு தீர்வாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1,421 ஆக குறைந்த தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!