Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருங்கை இலையில் தேநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்...!!

Webdunia
முருங்கைக்கீரையில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் இருக்கிறது. உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
முருங்கைக்கீரை தேநீர் தயாரிக்க: 
 
ஒரு தேக்கரண்டி முருங்கைக்கீரை பொடி, ஒரு தேக்கரண்டி கிரீன் டீ பொடி, 4 புதினா இலைகள், 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1  தேக்கரண்டி வெல்லம், தேவையான அளவு சுடான நீர் ஆகியவை சேர்த்து கலந்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்க வைக்கவும்.  நன்கு  கொதித்த பின் அதனை குடித்து வரலாம்.  
 
பயன்கள்: 
 
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகள் உறுதியாக இருக்கும். ஆர்த்திரிடிஸ் மற்றும் மூட்டு வலி இருப்பவர்கள் தினமும்  முருங்கைக்கீரை தேநீரை குடித்து வரலாம்.
 
ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் ஏ இருப்பதால் கண் பார்வை மேம்படும். தினமும் முருங்கைக்கீரை தேநீர் குடித்து வந்தால் கண்  பார்வை அதிகரிக்கும்.  
கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. மலச்சிக்கல் வாயுத்தொல்லை, அல்சர், செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது. 
 
இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆஸ்துமா பிரச்சனைகளை சரிசெய்து மனநிலையையும் சீராக வைக்க உதவுகிறது.
 
குறிப்பு: டயட்டில் இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி குடிக்கலாம். கர்ப்பிணிகள் இதனை குடிப்பதை தவிர்க்க வேண்டும். நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு போன்ற உடல் உபாதைகளுக்கு மருந்துகளை சாப்பிட்டு வந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி குடித்து வரலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வயதானவர்களை தாக்கும் சர்கோபீனியா நோய்.. என்ன செய்ய வேண்டும்?

கோடையில் பீர் குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. தடுப்பது எப்படி?

கோடை காலத்தில் குளிர்ச்சியை தரும் கம்பங்கூழ்.. முன்னோர்கள் தந்த உணவு..!

மூக்கு கண்ணாடியை முறையாக பராமரிப்பது எப்படி? முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments