Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இத்தனை மருத்துவ குணங்களை கொண்டதா பூண்டு...!

இத்தனை மருத்துவ குணங்களை கொண்டதா பூண்டு...!
வாயுத்தொல்லைக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்து. எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தூங்கும் முன்னர் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், வாயுத்  தொல்லை குறையும்.
1. பூண்டைப் பொடி செய்து தேனில் குழைத்து தலை, புருவம் மற்றும் பூச்சிவெட்டினால் முடிவளராமல் இருக்குமிடத்தில் தேய்த்து வர முடி வளரும்.
 
2. பச்சைப் பூண்டை உண்பதால் உடல் பலம் பெறும். உற்சாகம் ஏற்படும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலி மறையும். புளிப்பால் உண்டாகும் எரிச்சல்  நீங்கும். இரத்த அழுத்தம் குறையும்.
 
3. ஜலதோஷம், கடுமையான சளி மற்றும் இருமலால் அவதிப்படுபவர்கள் தூங்கும் முன் ஒரு பல் பூண்டை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
 
4. பூண்டை நசுக்கி சுண்ணாம்பு நீரில் நனைத்துக் கட்ட நகச்சுற்றி குறையும்.
 
5. ஒரு வெள்ளைப் பூண்டு, ஏழு மிளகு இவைகளைச் சேர்த்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் போய்விடும்.
 
6. இரவு உறங்கும் முன்னர் பூண்டு சாப்பிடுவதால், ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.
 
7. பூண்டுடன் சிறிதளவு ஓமத்தை நசுக்கிப்போட்டு கசாயம் வைத்துக் குழந்தகளுக்குக் கொடுக்க குழந்தைகளின் வாந்தி குறையும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாழைப்பூ கூட்டு செய்ய....!