Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வயிறு உப்புசத்தை சரிசெய்ய கூடிய அன்னாசிப்பூ !!

Advertiesment
வயிறு உப்புசத்தை சரிசெய்ய கூடிய அன்னாசிப்பூ !!
அன்னாசிப்பூ மிகவும் எளிதில் கிடைக்கக் கூடியது. இதில் ஆன்டி ஆக்சிடென்ட், வைட்டமின்- ஏ வைட்டமின்-சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.  இது நட்சத்திர வடிவம் கொண்ட ஒரு மசாலா பொருள். 

அந்தவகையில், முறையற்ற மாதவிலக்கை சீர்செய்ய கூடியதும், காய்ச்சல் மற்றும் உடல் வலியை போக்கவல்லதும், வயிறு உப்புசத்தை சரிசெய்ய கூடியதுமான அன்னாசி பூவின் நன்மை குறித்து பார்க்கலாம்.
 
அன்னாசிப்பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் முடி உதிர்வு, தலைமுடி வறட்சி, சரும நோய்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கிறது.
 
அன்னாசி பூ மணம் தரக்கூடியது. உணவாவது மட்டுமின்றி உன்னதமான மருந்தாக விளங்குகிறது. மாதவிலக்கு பிரச்சனையை சரிசெய்கிறது. மாதவிலக்கை தூண்டி  முறைப்படுத்துகிறது.
 
அஜீரணக் கோளாறுகள், இதயம் பாதிப்பு, வாய் துர்நாற்றம், நுரையீரல் பாதிப்பு, சளி தொந்தரவு, உயர் ரத்த அழுத்தம், குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள் பாதிப்பு போன்றவைகளுக்கு அன்னாசிப்பூ அருமருந்து.
 
தாய்ப்பாலை பெருக்க கூடிய அற்புத சக்தி உடையது. அதிக சத்துக்கள் உள்ள இது, புற்றுநோய்களை உண்டாக்கும் நச்சுகளை வெளியேற்றும். செரிமானத்தை  தூண்டும். சளி, இருமல் காய்ச்சலை போக்கும் நல் மருந்தாகிறது. 
 
அன்னாசி பூவை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அன்னாசி பூ, பெருங்காயம், பனைவெல்லம்.
 
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதனுடன், ஒரு ஸ்பூன் பனை வெல்லம் சேர்க்கவும். இளம் வறுப்பாக வறுத்து பொடி செய்த அன்னாசி பூ பொடி அரை ஸ்பூன் அளவுக்கு போடவும். கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும்.

இதை தினமும் காலை வேளையில் எடுத்துவர தடைபட்ட  மாதவிலக்கு பிரச்னை சரியாகும். மாதவிலக்கை சீர் செய்கிறது. இளம் தாய்மார்களுக்கு பால் பெருக்கியாக விளங்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஸ்தூரி மஞ்சளின் நன்மைகள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம் !!