Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பருக்களை உடனடியாக போக்க உதவும் சில வழிகள்!

Advertiesment
பருக்களை உடனடியாக போக்க உதவும் சில வழிகள்!
முகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சருமத்தில் அதிகளவு எண்ணெய் சுரப்பு, அதிகமான மேக்கப், தூசிகள் மற்றும் அழுக்குகளால் சருமத் துளைகள் அடைப்பது, மரபணு காரணங்கள், சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் அதிகரித்தல், ஹார்மோன் மாற்றங்கள், அதிகமாக  வெயிலில் சுற்றுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ரோஸ் வாட்டர் சந்தனப் பவுடரை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, பருக்களும் மறைந்துவிடும்.
 
தினமும் சீழ் நிறைந்த பருக்களின் மீது சிறிது தேனைத் தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால்  சருமத்துளைகளில் உள்ள அடைப்புக்கள் நீங்கி, சருமத்துளைகள் சுத்தமாகும்.
 
கற்றாழை ஜெல்லை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து  பின்பற்றினால், முகம் பருக்களின்றி பிரகாசமாக இருப்பதைக் காணலாம்.
 
விளக்கெண்ணெயை சிறிது வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஒருவேளை  விளக்கெண்ணெய் சற்று அடர்த்தியாக இருப்பது போல் இருந்தால், ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள்.
 
உருளைக்கிழங்கை வட்ட துண்டுகளாக்கி, ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பின் அதை எடுத்து முகத்தை மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்துக் கழுவ  வேண்டும். இல்லாவிட்டால், உருளைக்கிழங்கு சாற்றினை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் பருக்கள் நீங்கி,  முகம் அழகாக இருக்கும்.
 
வெந்தயக் கீரையை சிறிது எடுத்து அரைத்து, அத்துடன் தயிரை சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பனைமரத்தினால் கிடைக்கும் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்