Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயற்கையான முறையில் வயிற்றை சுத்தப்படுத்த சில வழிகள் !!

இயற்கையான முறையில் வயிற்றை சுத்தப்படுத்த சில வழிகள் !!
, திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (13:39 IST)
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நில ஆவாரை பொடி இரவில் ஒரு டம்ளர் வென்னீரீல். ஒரு ஸ்பூன் நில ஆவாரை பொடி கலந்து எட்டு மணிக்கு டிபன் சாப்பிட்டால் பத்து மணிக்கு குடிங்க காலை ஏழு மணிக்கு வயிறு சுத்தமாகி விடும்.


சுத்தமான மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும். இந்த ஆமணக்கு எண்ணெய் அதாவது விளக்கெண்ணெய், நம் வயிற்றை அதிக அளவுக்கு சுத்தம் செய்யும். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் வயிற்றை சுத்தப்படுத்த இந்த ஆமணக்கு எண்ணெய்யைத் தான் பயன்படுத்துவார்கள். இது உடனடியாக மலச்சிக்கலைத் தீர்த்து நம் வயிற்றில் இருக்கும் கிருமிகளை வெளித்தள்ளி விடும்.

வயிறைச்சுத்தம் செய்ய விளக்கெண்ணெய், கடுக்காய், மற்றும் சில மாத்திரைகளும் மலமிலக்கியாக உபயோகிக்கப்படுவதுண்டு. இவை குடலைத்தூன்டி உணவுப்பாதையில் உள்ளதை எல்லாம் வேகமாய் புறம் தள்ளுபவை.

காலை எழுந்தவுடன் ஒரு பாத்திரத்தில் மூன்று லிட்டர் தண்ணீர் கொதிக்க வைக்கவும். பிறகு நன்கு கொதித்த அந்த தண்ணீரில், மூன்று எலுமிச்சை பழங்களை பிழிந்து விடுங்கள். அதனுடன் மூன்று ஸ்பூன் கல்உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வெதுவெதுப்பாக வெறும் வயிற்றில் ஒரு அரை லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். தண்ணீர் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் கழிவறை செல்லத் தூண்டும். இல்லையெனில், பத்து நிமிடம் கழித்து, மேலும் சிறிதளவு தண்ணீரை அருந்தவும். ஐந்து நிமிடங்களில் கழிவறை செல்வது நிச்சயம். சென்று வந்துடன், மீண்டும் எலுமிச்சை உப்பு நீர் கலவையை எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு குடிக்கலாம்.

சில நிமிடங்களில், மறுபடியும் மலம் கழியும். இதேபோல் நான்கு, ஐந்து முறை இந்த கலவையை முடிந்த அளவு அருந்தினால், அத்தனை முறையும் கழிவறை செல்வது நிச்சயம். நீர் அருந்துவதை நிறுத்தினால், மலம் கழிவது நின்றுவிடும். இந்த முறையில் வயிற்றை இயற்கையான முறையில் சுத்தம் செய்யப்படும். குடல் வலுப்பெறும். சாப்பிடும் உணவு உடம்பில் தங்கும். நன்கு செரிமானம் ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீன்ஸை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் இத்தனை அற்புத நன்மைகள் உள்ளதா...?