Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில பயனுள்ள இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

Webdunia
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம். முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல்  தளர்ச்சி விலகும்.

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். 
 
பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
 
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
 
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை சுகமாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும். நெருப்பு சுடுநீர் பட்ட  இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
 
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும். நெருப்பில் சுட்ட வெங்காயத்தை  சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
 
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
 
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு  அதிகமாகும்.

தொடர்புடைய செய்திகள்

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இந்த நிறுவனங்களின் காபி தூள் ஆபத்தானவையா? – உணவு பாதுகாப்புத்துறை அறிக்கையால் அதிர்ச்சி!

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

அவித்த முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

அவித்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments