Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க உதவும் புதினா !!

வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க உதவும் புதினா !!
புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு கார்போஹைடிரேட், நார்ப் பொருள் உலோகச் சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம் இரும்புச் சத்துக்களும், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.

பல் ஈறு வேக்காடு, பல் ஈறுல் இரத்தம் வருதல், பல் சொத்தை, பல் அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கும். இந்தப்  பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார்.
 
புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊறவைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பள பளக்கும்.
 
புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளிப்பகுதியில்  பற்றுப் போட்டால், தொண்டை வலி, தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். தொண்டைப் புண் ஆறிவிடும்.
 
தாய் சேய்க்கு நல்ல போஷாக்கு: கர்ப்பிணிப் பெண்களுக்கும், வளரும் குழந்தைகளுக்கும், புதினா நல்ல செரிமானத்தைக் கொடுத்து சத்துக்களைக் கிரகிக்க உதவுகிறது. இதன் மூலம் நல்ல போஷாக்கை அடையலாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடி உதிர்வை கட்டுப்படுத்தும் கற்றாழை எண்ணெய் !!