Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொடுகு தொல்லையிலிருந்து விடுபட சில எளிய வழிகள்

பொடுகு தொல்லையிலிருந்து விடுபட சில எளிய வழிகள்

Advertiesment
பொடுகு தொல்லையிலிருந்து விடுபட சில எளிய வழிகள்
கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தல். சிறிதளவு தயிரை தலையில் தேய்த்து சிறிது நேரத்தில் சீயக்காய் அல்லது ஷாம்பு தேய்த்து குளித்தல் நல்ல பலன் கிடைக்கும்.


 
 
பூச்சித்தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை. அதனால் அந்நேரங்களில் ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தல்.
 
கறிவேப்பிலை, துளசியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தல். வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் நாளடைவில் பொடுகு தொல்லை நீங்கும்.
 
எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய்எண்ணெய் கலந்து தலையில்தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம்பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறுமாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.
 
வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தல்.நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர வேண்டும்.
 
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.சோற்றுக்கற்றாழை தேய்த்தும் குளிக்கலாம்.நெய், பால், வெண்ணெய் முதலிய கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். இந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்குத் தேவையான எண்ணெய் பசை கிடைக்கிறது.. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடிகளைக் காப்பாற்றலாம்.
 
நல்லெண்ணெய் வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து குளித்து வந்தால், பொடுகு நீங்குவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக வளரும்.
 
ஆலிவ் ஆயிலுக்கும் ஸ்கால்ப்பில் இருந்து வெளிவரும் செதிலை போக்கும் தன்மை உள்ளது. ஆகவே ஆலிவ் ஆயிலை தலையில் தடவி மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
 
சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
 
மருதாணி இலையை அரைத்து அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தலைக்கு தடவி குளிக்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, நரைமுடியின் நிறமும் மாறும்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுநீரக கோளாறுக்கு அருமையான மருந்து வாழைத்தண்டு