Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதங்களை பராமரிப்பதற்கான சில எளிய குறிப்புகள் !!

Nail Care
, வியாழன், 12 மே 2022 (18:23 IST)
வறண்டு கால்களில் உள்ள எண்ணெய் பசையையும் வெயில் உறிஞ்சிவிடுவதோடு, கால்களும் மென்மையை இழந்துவிடும். ஆகவே கால்களை எப்போதும் அழகாக பராமரிக்க பணத்தை செலவழிக்காமல், வீட்டிலேயே ஒரு ஸ்பா போன்று ரெடி செய்து கால்களை பராமரிக்கலாம்.


பாதங்களுக்கு பராமரிப்பு செய்யும் போது, முதலில் கால் விரல்களில் உள்ள நெயில் பாலிஷை நீக்கிவிட வேண்டும். அதற்கு அசிட்டோன் என்னும் நெயில் பாலிஷ் ரிமூவர் இருக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தினால், விரல்கள் நன்கு பளிச்சென்று இருக்கும்.

நெயில் பாலிஷை நீக்கியப் பின், நகங்களை வெட்டி விட வேண்டும். வேண்டுமென்றால் நகங்களை வெட்டலாம், ஏனெனில் நிறைய பெண்கள் நீளமான நகங்களைத் தான் விரும்புகின்றனர். ஆனால் நகங்களை வெட்டினால் தான் எந்த நோயும் வராமல் இருக்கும்.

ஏனெனில் தினமும் வெளியே செல்வதால், நகங்களில் அழுக்குகள் புகுந்துவிடும். இதனால் சருமத்தில் தொற்றுநோய்கள் ஏற்படும்.

முதல் இரண்டு ஸ்டெப்ஸ் முடிந்ததும், கால்களை வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பை சேர்த்து, 8-10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். இதனால் பாதங்களில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும்.

வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை போட்டு, பாதங்களை அதில் 4-5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பாதங்களை தேய்த்தவுடன் ஊற வைப்பதால், பாதங்களில் உள்ள அழுக்குகள் எளிதில் வெளியேறிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் என்ன நன்மைகள்...?