காலை 7 முதல் 8.30 மணிக்குள் உணவு கொள்ள வேண்டும். (நமது உடற் கடிகாரத்தின் படி காலை 7 முதல் 9 வரை இரைப்பைக்கு சத்தி சிறப்பாக கிடைக்கும் நேரம். 9முதல் 11 வரை தண்ணீர் கூட கூடாது. அது மண்ணீரல் தன்னை முறைப்படுத்திக்கொள்ளும் நேரம்.
மாதம் ஓர் முறை மென்மையான பேதி மருந்துகள் எடுத்தல் நல்லது. இப்போதுள்ள உணவு மற்றும் சூழல் எதிர்முறையர்களால் மாசுபட்டுள்ளது. அதனால் மாதம் ஓர்முறை மென்மையான பேதிமருந்துகளால் உடல்தூய்மை செய்வது நல்லது.
கழிவுகளை கட்டுப்படுத்தல் கூடாது. காலை, மாலை கழிவு வெளியேற்றப் பழக்க வேண்டும். வாரம் இரு முறை எண்ணெய் குளியல் வேண்டும்.
பசியறிந்து உண்ணுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம். தாகம் உணர்ந்து தேவையான அளவு குளிந்த நீர் குடித்தல் வேண்டும்.
மதிய உணவு பசி வரும்பொழுது எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டு வேளை உண்பவன் போகி என்பர் சான்றோர். பசித்துப் புசிப்பதே சிறப்பனதாகும்.
உணவுக்கு முன் இனிப்பான பழங்கள் சாப்பிடுதல் நல்லது. மூன்று வேளையுமே உணவுக்கு முன் பழங்கள் சாப்பிடுவது நல்லது. சாப்பிட்ட பின்பு குறுநடை பழகுதல் நலம் தரும்.
இரவு சூரியன் மறைவதற்கு முன் உணவை முடித்துக் கொள்ளுதல். இரவு கண்களுக்கு அதிகம் வேலை கொடுக்காதிருத்தல். இரவு உணவை மிதமாக கொள்ளுதல் நன்று. இரவு விரைவாக படுக்கைக்கு செல்லுதல் உடல் நலனை பாதுகாக்க உதவும்.