Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பலன்களில் சில..!!

Webdunia
பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமெனில் இதனை  சாப்பிடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
 
குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
 
இதய நோயாளிகளுக்கும் சிறந்தது, அதுமட்டுமின்றி சூடாக்கிய 1 கப் பச்சை வாழைப்பழத்தில் 3.6 கிராம் நார்ச்சத்து உள்ளது, எனவே உடல் எடையை குறைக்க  விரும்புவோர் இதனை எடுத்துக்கொள்ளலாம்.
 
மஞ்சை வாழைப்பழத்துடன் ஒப்பிடுகையில் பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது, ஒரு கப் பச்சை வாழைப்பழத்தில் 531 மில்லிகிராம்  பொட்டாசியம் உள்ளது.
 
எனவே இதயநோயாளிகள் இதனை சாப்பிட வேண்டும், ஆனால் அதிக அளவு பொட்டாசியம் சத்து சிலரின் உடலுக்கு பயனிளிக்காது என்பதால் அதனை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், இதில் விட்டமின் B6 நிறைந்துள்ளதால் உடலில் ஆக்ஸிஜனேற்றம் சிறப்பாக செயல்புரிய உதவுகிறது. 
 
மேலும் அது ஹீமோகுளோபின் உருவாவதற்கு விட்டமின் B6 அவசியமான ஒன்றாகும். விட்டமின் B6 இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், சீரான பற்களின் வளர்ச்சிக்கு பச்சை வாழைப்பழம் சாப்பிட வேண்டிய ஒன்றாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

அடுத்த கட்டுரையில்
Show comments