Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சருமத்தை பாதுகாக்க டிப்ஸ்...!!

வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சருமத்தை பாதுகாக்க டிப்ஸ்...!!
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு பருக்களுக்கு சில கைவைத்தியமும் உண்டு. துளசியை மென்றும் சாப்பிடலாம். உடன் ஒரு கைப்பிடி துளசியை மிதமான சுடுதண்ணீரில் போட்டு ஊறவைக்கவும். 

இந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். பருக்கள் இரண்டு நாட்களில் காய்ந்து உதிர்ந்துவிடும். மேலும் பருக்கள் மூலம் ஏற்படும் பேக்டீரியா தொற்றும்  ஏற்படாது .துளசி தவிர அரிசி மாவும் நல்லது. 
 
அரிவு மாவு 2 டீஸ்பூன், வெள்ளரி சாறு 2 டீஸ்பூன், ஒரு சிட்டிகை மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து பருக்கள் மற்றும் தழும்பு உள்ள இடத்தில்  தடவி 15 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீரில் கழுவலாம்.
 
சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும், உடல் சூட்டினை போக்கும். துளசி இலை சாறும் பருக்கள் உள்ள இடத்தில் தடவலாம். வேப்பிலை மிகவும் நல்ல  மருந்து. 
 
வேப்பிலை பவுடர் 1 டீஸ்பூன், பன்னீர், முல்தானி மெட்டி 2 டீஸ்பூன் கலந்து சருமத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் பருக்கள்  குறையும்.நிலவேம்பு பவுடரும் பயன்படுத்தலாம்.

அதில் இருக்கும் கசப்பு, ஆன்டி பேக்டீரியல், ஆன்டி ஃபங்கல், சரும பிரச்னை வராமல் பாதுகாக்கும். இதனை  சாதாரண மற்றும் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் செய்யலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது.
 
நிலவேம்புடன் சந்தனம் சர்த்து பயன்படுத்தலாம். நிலவேம்பு 1 டீஸ்பூன், உரசிய சந்தனம் 1 டீஸ்பூன், முல்தாணி மெட்டி 1 டீஸ்பூன், பன்னீருடன் கலந்த முகத்தில்  பத்து போடுவதைப் போல் போட்டு இரண்டு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவலாம். இது பருவினால் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யாது. 
 
பருக்களை எப்போதும் கை நகங்களால் கிள்ளக்கூடாது. அது தழும்பாக மாறி பள்ளமாகும். சருமத்தில் ஆழமாக பள்ளம் ஏற்படும் போது, நீக்குவது சிரமம்.  சருமத்திற்கு பிராண வாயு தேவை அதனால் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்ந்த தண்ணீரை விட மிதமான சூட்டில் தண்ணீர் குடிப்பது நல்லது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாயு முத்திரை செய்வதால் உண்டாகும் பலன்கள் !!