எலுமிச்சை சாறுடன் சம அளவு தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் எண்ணெய் வடிதல் போகும்; தோலில் ஏற்படும் கரும்புள்ளி மறையும்; முகப்பரு வராமல் தடுக்கும்.
தயிரிலுள்ள டைரோசின் என்கின்ற அமினோ அமிலம் இந்த மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்துவதால் சிவப்பழகு கூடும். முகத்தில் இந்த கலவையை பூசி சிறிது நேரம் மசாஜ் செய்வதால் தங்கியுள்ள அழுக்குள் நீங்கி முகம் பொலிவு பெரும். இவ்விரண்டிலுமே ஜின் என்ற மினரல் உள்ளதால் கண்ணிற்கு கீழே தோன்றும் கருவளையம் படிப்படியாக மறையும்.
உடலை பாதுகாத்துக் கொள்ள, அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசிக்குளித்தால் வேர்க்குரு நீங்கி உடல் பளபளப்பு அடையும்.
முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.
புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்.
ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவுடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி, பின் லேசான மேக்-கப் போட்டால், முகம் அழகாக காணப்படும்.
பழுப்பு நிற சருமத்தை உடனே போக்கி முகத்தை பொலிவாக்க, உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை வைத்து முகத்தை 10 நிமிடம் தேய்த்து வந்தால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.
பொன்னாங்கன்னி கீரையை தனியாகவோ அல்லது பருப்புடன் சேர்த்தோ சாப்பிட்டால் உடல் மெருதுவாகும்.
துளசியை காலையில் வெறும் வயிற்றில் 10 கிராம் அளவில் சாப்பிட்டு பால் குடித்து வந்தால், உடல் சூடு நீங்கி பருக்கள் தோன்றுவது குறையும்.
தேன் மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் பூசுவதால் சருமத்தில் ஈரபதத்தை அளித்து மென்மையாக்குகிறது. மெலனின் ஹார்மோன் நம் சருமம் கருமை அடைவதற்கான ஒரு காரணியாக அமைகிறது.