Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முட்டை ஓட்டை பயன்படுத்தி செய்யப்படும் சில இயற்கை அழகு குறிப்புகள்...!

Webdunia
நாம் முட்டையை பயன்படுத்தி விட்டு ஓட்டை தூக்கி எறிந்துவிடுவோம். அப்படி தூக்கி எறியும் முட்டை ஓட்டில் பல நன்மைகள் உள்ளது. மேலும் அவை அழகு சாதன பொருளாகவும் பயன்படுகிறது.
முட்டையின் ஓட்டை நன்கு கழுவி பொடி செய்து கொள்ளவேண்டும். பின்னர் அந்த பொடியை ஒரு பாத்திரத்தில் அல்லது கடாயில் போட்டு 10 நிமிடங்கள்  வரை நன்கு வறுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது முட்டை ஓட்டில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.
 
கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைய, முட்டை ஓட்டின் பொடியில் 2 டீஸ்பூன் எடுத்து, அதை தேனுடன் கலந்து தினமும் கண்களைச் சுற்றி தடவி, மசாஜ் செய்ய வேண்டும்.
 
தினமும் பல் துலக்கிய பின், முட்டை ஓட்டின் பொடியை பற்களில் தேய்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். முட்டை ஓட்டில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் மஞ்சள் கறை நீங்கிவிடும்.
 
அந்த பொடித்த முட்டை தூளுடன், முட்டை கருவின் வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து அதை நன்றாக கலக்க வேண்டும். பேஸ்ட் பதத்தில் வந்ததும் அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகத்திற்கு ஈரப்பதம் கிடைப்பதுடன், சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
 
முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைவதற்கு, முட்டையின் ஓட்டை பொடியாக்கிக் அதனுடன் தயிர் 2 டேபிள் ஸ்பூன் கலந்து முகத்தில் தடவி காய வைத்து  கழுவ வேண்டும்.
 
சருமத்தில் உள்ள அலர்ஜி, அரிப்புகள் குணமாக, முட்டை பொடியை வினிகரில் கலந்து 5 மணி நேரம் ஊறவைத்து, பின் மெல்லிய துணி அல்லது காட்டன்  பஞ்சு பயன்படுத்தி, அந்த கலவையை தொட்டு அலர்ஜி வந்த இடத்தில் தடவ வேண்டும்.
 
முட்டை ஓட்டின் பொடியுடன் கற்றாழை ஜெல் மற்றும் தேன் 1 டீஸ்பூன் கலந்து முகத்தில் தடவி, வந்தால் சருமம் மிருதுவாகும். இதை வாரம் 2 முறை செய்ய  வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் என்ன? போக்க எளிய வழிகள்!

அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments