ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன. பொதுவாகவே ஆலிவ் எண்ணெய் மாய்ஸ்சுரைசராக செயல்பட்டு சருமத்திற்கு இயற்கையான பிரகாசத்தை அளிக்க உதவுகிறது. தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
ஆலிவ் எண்ணெய் சில துளிகள் எடுத்து சருமத்தில் வட்ட வடிவில் தேய்த்து மசாஜ் செய்யலாம். ஐந்து நிமிடங்கள் கழித்து துண்டை வெதுவெதுப்பான நீரில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுக்கலாம். அவ்வாறு செய்து வந்தால் சருமம் பொலிவுடன் மிளிர தொடங்கும்.
இறந்த சரும செல்களை நீக்குவதற்கு சர்க்கரை சிறந்த பொருளாக கருதப்படுகிறது. இறந்த செல்களை நீக்குவதோடு சரும துளைகளில் அடைப்பட்டிருக்கும் அசுத்தங்களை நீக்கி இழந்த பொலிவை மீட்டெடுக்கவும் உதவும்.
பப்பாளியில் காணப்படும் பப்பெய்ன் என்ற நொதி, சரும பொலிவை மீட்டெடுக்க உதவும். கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்யும். பப்பாளியில் இருக்கும் வைட்டமின் ஏ, பாப்பைன் போன்றவை சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதத்தை தக்கவைக்க துணைபுரியும். முதலில் பாலை கொண்டு முகத்தை நன்றாக கழுவவும். பின்பு அரை பப்பாளி பழத்தை மசித்து அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தேய்த்து ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவிவிடலாம். சருமம் பொலிவுடன் மின்னுவதை காணலாம்.
வெள்ளரிக்காய் சாறை `மாஸ்க்'ஆக பயன்படுத்தலாம். வீக்கத்தைத் தவிர்ப்பதற்காக துண்டுகளை கண்களில் வைக்கலாம். உங்கள் சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க சருமத்தில் தேய்க்கலாம். வெள்ளரிக்காயை துருவி அதில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். முகத்தில் தடவி 5 நிமிடம் வைத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.