Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சில மருத்துவ குறிப்புகள் !!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (15:26 IST)
சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன. ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.


சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும். பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், கண் நோய்கள் நெருங்காது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments