Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில மூலிகை டீ வகைகளும் அதன் அற்புத பயன்களும் !!

Webdunia
பால் கலக்காத மூலிகை டீ தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம்.

துளசி டீ: சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து, வெல்லம் சேர்த்தால் துளசி இலை டீ தயார். இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
 
ஆவாரம் பூ டீ: காம்பு நீக்கிய ஆவாரம் பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து ஆவாரம் பூ டீ சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும். ஆவாரம் பூக்களை நிழலில் உலர்த்தியும் அல்லது புதிதான ஆவாரம் பூக்களை பயன்படுத்தியும் செய்யலாம்.
 
கொத்தமல்லி டீ: கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.
 
செம்பருத்திப்பூ டீ: ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் செய்து சுவைக்கலாம்.
 
புதினா இலை டீ: புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
 
முருங்கை இலை டீ: முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் முருங்கை இலை டீ தயார்.
 
கொய்யா இலை டீ: கொய்ய இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.
 
குறிப்பு: டீ வாசனை வேண்டும் என்றால் சிறிது டீ தூளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச்சர்க்கரை சேர்ப்பது தான் மிக நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments