Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண் பார்வையை மேம்படுத்த உதவும் சில அற்புத குறிப்புகள் !!

Webdunia
கண்களில் படும் தூசினால் ஏற்படும் பாதிப்பைப் போக்க வைட்டமின் ஏ, பி, சி, ஈ,இரும்புச்சத்து, ஜிங்க், லூடைன் போன்ற அணைத்து வைட்டமின் சத்துக்களும் இதில் இருக்கிறது.

கேரட் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ, பீட்டா கரோடின் உங்கள் கண் பார்வையை சீராக வைக்க உதவும்.
 
கண்களில் படும் அதிக வெளிச்சத்தினால் கண்களுக்கு ஏற்படும் அழுத்தத்தினால் உண்டாகும் பார்வைக்கோளாறை சரி செய்யும் ப்ரோக்கோலி. இதில் வைட்டமின்  பி, லூடைன், ஜீஏந்த்ஏக்ஸ்கின் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது.
 
மீன்களில் குறிப்பாக, காலா மீன், கெளுத்தி மீன் வயதான பின் ஏற்படும் பார்வைப் பிரச்சனைகளை சரி செய்யும். கண் பார்வைத் திறன் அதிகரிக்கும் அனைத்து சத்துக்களும் அதாவது வைட்டமின் பி, சி, ஈ, லூடைன், பீட்டா கரோடின் கொண்டது அவகேடோ.
 
ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ரோடாப்ஸின் சத்துக்கள் உடம்பில் புது செல்களை உருவாக்கி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து கண் பார்வையை மேம்படுத்தும்.
 
காலையில் எழுந்தவுடன் கண்கள் மீது தண்ணீரை நன்றாகத் தெளித்து 3, 4 முறை கண்களை நன்றாக சுத்தப்படுத்தவேண்டும். வாய் நிறைய தண்ணீரை நிரப்பிக்கொண்டு, பின் கண்கள்மீது குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். இதனால் கண்கள் நன்றாக விரிந்தவாறு இருக்கும். பிறகு, ஆப்டிக்கல்ஸ்  கடைகளில் எளிதாகக் கிடைக்கும், ஐ வாஷ் கப் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். 
 
ரோஸ் வாட்டரை 15 துளிகள் இதில் நிரப்பி, பின் தண்ணீரால் இந்த கப்பை நிரப்பி,  கண்களை திறந்தவாறு, கண் விழிகளை சுற்றுங்கள். ரோஸ் வாட்டர் கண்களின் மேற்பரப்பை நன்றாக சுத்தம் செய்யுமாறு கண் விழியை சுற்றுங்கள். ஒரு நிமிடம் கழித்து, தண்ணீரை மாற்றி அடுத்த கண்ணையும் இவ்வாறு சுத்தம் செய்யலாம்.
 
வேலை செய்யும்போது ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிது தண்ணீர் பருகுங்கள். பின் கைகளைத் தேய்த்து, மூடிய கண்கள்மீது வைக்கவும். கைகளில் உள்ள அக்குப்ரேசர் புள்ளிகளை அழுத்துங்கள். ஒவ்வொருமுறை சிறுநீர் கழிக்கச் செல்லும்போதும், வாயில் தண்ணீர் நிரப்பி, கண்களைக் கழுவுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அடுத்த கட்டுரையில்
Show comments