Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் ப்ளாக் டீ குடிப்பதால் பெறும் நன்மைகள் !!

Webdunia
ப்ளாக் டீயை தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால், நீரிழிவு வருவதற்கான அபாயம் குறையும். பிளாக் டீயில் ஃப்ளூரைடு இருப்பதால் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ப்ளாக் டீயில் டேனின்கள் அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. எனவே உங்கள் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட தினமும் ஒரு டம்ளர் ப்ளாக் டீ குடிப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.
 
பிளாக் டீயில், ஆப்பிள்களில் இருக்கும் சத்துக்கள் இருக்கிறது. பிளாக் டீ பாக்டீரியாவிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பையும்  பலப்படுத்துகிறது.
 
ஒரு கப் பிளாக் டீயில் உடலை ஹைட்ரேட் செய்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. பிளாக் டீ மன அழுத்தத்தை தடுக்கிறது. இது ஹார்மோன் அளவுகளையும்  சமப்படுத்துகிறது.
 
ப்ளாக் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் இருக்கும். எனவே இதனை தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால், குறிப்பிட்ட புற்றுநோய் உருவாவதைத் தடுக்கலாம்.
 
ப்ளாக் டீயை தொடர்ந்து பருகி வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, இதய நோய் மற்றும் பக்கவாதம் வரும் அபாயத்தைக்  குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
 
ப்ளாக் டீ பற்களில் ப்ளேக் உருவாக்கத்தைத் தடுக்கும் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் மற்றும் பல் சொத்தையாவதைத் தடுக்கும். உடல் எடையால் கஷ்டப்படுபவர்கள், ப்ளாக் டீயை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள குறைவான சோடியம் மற்றும் கலோரியால் உடல் பருமனடைவது குறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அடுத்த கட்டுரையில்
Show comments